பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

டெல்லி மாநில அரசு தான் எனது நோக்கம்; அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரசை நம்ப வேண்டாம் என்று மக்கள்
அப்போதே கூறினர். எங்களுடைய ஆட்சி குறுகியதாக இருந்தாலும், நிர்வாகத்தில் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எங்களால் முடிந்த அளவிற்கு நேர்மையான அரசியலை செய்தோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ஊழலை ஒழிக்கவும் வேண்டியது ஒரு அரசின் கடமை.

பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. எனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் பாராளுமன்ற தேர்தலுக்காக, ஒரு முதல்வர் பதவி விலக வேண்டியதில்லை.
முதல்வர் பதவியில் இருந்து விலகுவது என்பது சூதாட்டமல்ல. டெல்லி மாநில அரசு தான் எனது நோக்கம். டெல்லியில் அடுத்த தேர்தல் எப்போது நடத்தினாலும், நாங்கள் அதிக மெஜாரிட்டியுடன், அதாவது 50 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.