பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

 ஜேவிபியின் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு 
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.இந்த மாநாட்டின்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது.
 
கட்சியின் தலைமைத்துவத்துக்காக கே.டி. லால்காந்த, அநுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்ட போதும் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார். 
 
ரோஹண விஜய வீரவிற்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இன்றுவரை சேமவன்ச அமரசேகர செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.