பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

இலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சபைக்குச் சென்ற கமலேஸ் சர்மா
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதல்தடவையாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக இந்திய செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இலங்கை தொடர்ந்தும் கோரி வரும் கால அவகாசம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு கண்டுகொள்வதில்லை.
இந்தநிலையில் இதனை கைவிட்டு இலங்கையின் மனித படுகொலைகள் சர்வதேச விசாரணைகளுக்கு பொதுநலவாய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இதன்போது சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தியா, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் காட்டி வரும் முனைப்பு காத்திரமாக உள்ளது.
எனினும் இது தொடர்பில் மேலும் கடுமையான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புசபையிடம் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.