பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014


தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொன்னப்ப நாடாரின் மகன் பொன். விஜயராகவன் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் பொன்னப்ப நாடார்.அவரது மகன் பொன். விஜயராகவன் தமிழக பா
ஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 8-ஆம் தேதி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரைச் சந்தித்து விஜயராகவன் ஆசி பெற்றார்.
அப்போது பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் உடனிருந்தனர்.