பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

ஆந்திர முதல் அமைச்சர் டெல்லியில் தர்ணா போராட்டம்
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண்குமார்ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 


இதில் சீமாந்திரா பகுதியை சேர்ந்த மாநில மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மேலும், ஆந்திராவைச்சேர்ந்த 4 மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மத்திய மந்திரி சாம்பசிவ ராவ் கூறுகையில், மத்திய அரசால் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படமாட்டாது. தாக்கல் செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய மந்திரி பல்லம்ராஜூ கூறுகையில், தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவது ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.