பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்கும்: த ஹிந்து
எதிர்வரும் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க சார்பு நாடுகள் ஜெனிவாவில் கொண்டு வரவுள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையின் போது, இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரியை கோடிட்டு த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு இலங்கை சந்தர்ப்பத்தை வழங்கியது.
எனினும் தேவையற்ற வகையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடமாகாண அரசாங்கத்தின் குரல்களுக்கு செவிமடுக்காமல் இருந்து வருகிறது.
அத்துடன் கடந்த ஜெனிவா அமர்வின் போதும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை எதிராக வாக்களித்தமையை கருத்திற்கொள்ளாமல் இலங்கை செயற்பட்டு வருவதையும் கருத்திற் கொண்டே இந்தியா இந்த தடவையும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.