பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2014


பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல்
ஆந்திராவை பிரிக்கும் பணி தாமதமாகும் என்பதால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெறாது என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.



ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 1–ந்தேதியுடன், ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால், அதற்குள் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உரிமை உள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. மாநில பிரிவினை தொடர்பாக என்ன நடந்தாலும், இதில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தன.