பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2014


பாலுமகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



பொதுமக்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம்,பாலா, ஆர்.கே.செல்வமணி, அமீர், ஆர்.சி.சக்தி, கேயார் உள்ளிட்டோர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், நீங்கள் கேட்டவை படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா, பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கேயே இருக்கிறார்.