பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2014

சட்டசபைக்கு வந்தார் கலைஞர் தி.மு.க. தலைவர் கலைஞர்,  சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை
பதிவேட்டில் கையெழுத்திட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார்.

அவரை வாசலில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.