பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

இலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரணை கொண்டு வரவேண்டும்!- திமுக
இலங்கைக்கு எதிராக இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் கோரியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற குழு
தலைவர் டி.ஆர். பாலு இந்தக் கோரிக்கையை இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது விடுத்தார்.
இந்த மாநாடு லோக்சபா சபாநாயகர் மீரா குமாரால் கூட்டப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த டி.ஆர். பாலு, இலங்கைக்கு எதிராக இந்தியா கடும் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமது கட்சி எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.