பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2014


 கொழும்பு - யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலை ; நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
தலைநகர் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. இதற்கு 600 பில்லியன் ரூபா நிதியை சீனா வழங்கி இருக்கிறது.

எந்திரமுல்லையில் இருந்து தம்புள்ளை வரையில் தனியான நெடுஞ்சாலையாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ஏ9 வீதியுடன் இந்த நெடுஞ்சாலை இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.