பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

அ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்
அ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாற்று நிர்வாகி நியமிக்கப்படும் வரை அவர் வகித்து வந்த பொறுப்புகளை பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்புகளை கால்நடைத்துறை அமைச்சரான டி.கே.எம். சின்னையா கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.