பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2014

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.


தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 982 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பில் 49 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதில் 598 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலும் 360 முறைப்பாடுகள் தென்மாகாணத்திலும் பதிவாகியுள்ளதுடன். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம்307 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே  அமைப்பு குறிப்பிட்டுள்ளது.