தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் வருடம் தோறும் நடைபெறு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் கழகங்களில் உள்ள வீரர்கள் தனித்து மற்றம் குழு நிலையாக போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர்.
அதிக புள்ளிகளை பெரும் வீரர்கள் மற்றும் கழகங்களுக்கு கேடயங்களும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டது.
இவ் வருடம் மட்டுவில் வளர்மதி 78 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினையும், மோகனதாஸ் 34 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது. இதேவேளை மட்டுவில் வளர்மதி தொடர்ந்தும் 11 வருடங்களாக வெற்றியினை தனதாக்கி தென்மராட்சியின் நாயகனாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
|