பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு நள்ளிரவு 12,40 மணிக்கு 229 பயணிகளுடன் mh370 என்ற விமானம் புறப்பட்டது  நள்ளிரவு 1.20 மணி வரை தொடர்பில்
இருந்த அந்த விமானம் அதன்பின் ரேடாரில் இருந்து மறைந்தது..
இந்நிலையில் தாய்லாந்தில் 1.28 மணிக்கு ஒரு விமானம் மலேசியாவை நோக்கி திருமபிசென்று கொண்டிருநதது என்றும், அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும தாய்லாந்து தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ ரேடாரில் சிக்னல் பதிவாகியுள்ளது. அந்த விமானம் mh370 ஆக் இருக்கலாம் என்றும் ஆனால் அந்த விமானத்தின் சிக்னல் தெளிவாக கிடைக்காததால் அந்த விமானத்தின் எண்ணை கண்டுடிபிடிக்க முடியவில்லை என்று தாய்லாந்து ராணுவ அதிகாரி மோர்டல் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு பிறகு தாய்லாந்து தெரிவித்துள்ள புது தகவலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.