பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

மதிமுக வேட்பாளர் பட்டியல் 18–ந்தேதி வெளியீடு
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி,
தென்காசி (தனி) ஆகிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வருகிற 18–ந்தேதி அறிவிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு வேட்பாளர் பட்டியலை வைகோ வெளியிடுகிறார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் –டாக்டர் மாசிலாமணி
காஞ்சீபுரம் –மல்லை சத்யா.
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் மறுநாள் வைகோ விருதுநகர் செல்கிறார். 19 மற்றும் 20–ந்தேதி விருதுநகரில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 19–ந்தேதி முதல் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.