பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2014

விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து!
மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 


தேனி, மதுரை, விருதுநகரில் இன்று விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதையொட்டி கட்சியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், பா.ஜ., கூட்டணி இறுதி செய்யப்பட்டு, அதன் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் முறையாக அறிவிப்பு வெளியிடுகிறார். இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இதில் பங்கேற்க சென்னை சென்றார். இதனால் இன்று நடக்கயிருந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.