பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல
இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதானது எம் நாட்டின் பன்மொழி, பன்மத, பல்லினத் தன்மையை வலியுறுத்துவதாக அமையும். அந்த முற்போக்கு நகர்வில் ஒரு பிரதான பாத்திரத்தை தம்பி மனோ கணேசன் வகித்து வருகின்றார். இதைத்தான் அண்மையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதாவது சௌமியமூர்த்தி தொண்டைமானைத் தொடர்ந்து இளம் அரசியல்வாதி மனோ கணேசனின் அரசியல் பண்பாடு அவ்வாறான ஒரு சிந்தனைக்கு இட்டுச் செல்வதம்பி மனோ இரு புதிய சிந்தனைகளை வலியுறுத்தி வந்துள்ளார். அதாவது சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஏற்ற ஒரு தமிழ்த் தலைமைத்துவத்தை அவர் உருவாக்கி வருகின்றார். அதாவது அவர்களும் சேர்ந்து தம்முடன் முன்னேற வழிவகுத்து வருகின்றார்.
அடுத்து தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் அவர்கள் யாவரும் இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களே என்ற உணர்வை வலியுறுத்தி வருகின்றார்" தாகக் குறிப்பிட்டிருந்தேன்"