பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்
முற்றுகையிட இருப்பதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்       திருமுருகன் பேசுகையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை அமர்வில் தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. அமெரிக்க அரசு இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள இந்த தீர்மானம் உண்மையில் தமிழினத்திற்கு எதிராக நடந்த இனப்படுகொலையை போர்குற்றமாக சித்தரித்து போரில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகளை மட்டும் தண்டித்து சிங்களப் பேரினவாதத்தை காப்பாற்றும் நோக்குடனேயே கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.