பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2014

மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
news
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார்.
 
இலங்கைக்கு தற்போது ஜெனிவாவில் பாரிய பிரச்சினை இருப்பதாக அரசாங்கம் கூறிவருகின்றது. எனினும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலகுவில் நீக்கிவிட முடியும்.
 
இந்த நிலையில் இது தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-