பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2014

பல்லி விழுந்த தண்ணீரை குடித்த 32 மாணவ–மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே கொன்னையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் வசதிக்காக
பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து மாணவ–மாணவிகள் குடித்தனர். அப்போது தண்ணீரில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசியது. உடனே மாணவர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.

அப்போது தொட்டிக்குள் இறந்த பல்லி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. பல்லி விழுந்த தண்ணீரை குடித்ததால், மாணவ–மாணவிகள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையே 1 மற்றும் 2–ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் அங்கு திரண்டனர். விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.
தண்ணீர் குடித்த மாணவ–மாணவிகள் அனைவரும் ஆம்புலன்சு மூலம் திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். 19 மாணவிகளும், 13 மாணவர்களும் என மொத்தம் 32 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.