பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2014

விபூசிகா, ஜெயகுமாரியை விடுவிக்குமாறு பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது


பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக நேற்று பிற்பகல் 3.00 மணி முதல் 5.30 வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அத்துடன் தமிழர் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக நடைபெறும் ஜனநாயக விரோதக் கைதுகளை எதிர்த்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரலெழுப்பினர்.