பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2014

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையோரம் உள்ள தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர் ராஜா, ரியல் எஸ்டேட் புரோக்கர் பேச்சிமுத்து, பேச்சிராஜ், உறவினர்களான சகுந்தலா, அவரது கணவர் மைக்கேல்ராஜ்
ஆகியோர் சொந்த வேலையின் காரணமாக கோவைக்கு வியாழக்கிழமை சென்றார்களாம். வாகனத்தை ராஜா ஓட்டினாராம். இந்நிலையில் அங்கு பணியை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி சென்றனர். அப்போது, விருதுநகர் சூலக்கரை தனியார் மருத்துவமனை அருகே வரும் போது 4 வழி்சசாலையோர இரும்பு தடுப்பில் கார் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜாவும், பேச்சிமுத்துவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், பேச்சிராஜ், சகுந்தலா மற்றும் அந்தோனிடேவிட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்தோனிடேவிட் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.