பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2014

பாகிஸ்தானில் பயங்கரம்! 40 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் இன்று இரண்டு பேருந்துகளின் மீது பெட்ரோல் டேங்கர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உடல் கருகி பலியாயினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நெடுஞ்சாலை ஒன்றில், 100 பயணிகளுடன் வந்த இரண்டு பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன.
அப்போது எதிரே வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லொறி மீது இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததால், 40 பயணிகள் உடல் கருகி பலியாயினர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் பலியான நபர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவு கரிக்கட்டையாக காணப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.