பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

அமலனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு; 5பேர் பொலிஸாரால் கைது

பொன்னணிகளின் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் சடலம் பிரேரத பரிசோதனையினை அடுத்து உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


பிடரிப்பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டதனால் மண்டையோடு உடைந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்துடன்  தொடர்புடைய 5பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் வடடாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய சம்பவம் தொடர்பில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.