பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் விடுதலை

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தமிழர்கள் வாழும் கிளிநொச்சி பகுதியில் மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரை இலங்கை அரசு திடீரென பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கைது நடவடிக்கை உலகின் கவனத்தை ஈர்த்தது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால் இலங்கை அரசோ, இருவரும் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியால் இந்த இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது இலங்கை அரசு.