பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014


திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது.    நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.   இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி.  இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும்,  ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.