பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2014

டெல்லியின் தல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில், பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்காக வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் மோடி தலைமையிலான அரசு அமையும் என்று நம்பிக்கை
தெரிவித்ததோடு, "மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தர வேண்டுகிறேன். தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்க வேண்டும் எனக் கோருகிறேன். பாதுகாக்கும் என நம்புகிறேன். அமையப் போகும் மோடி அரசு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.