பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014

வைகோ காரை மறித்து போலீசார் சோதனை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு காரில்  காலை புறப்பட்டுச் சென்றார்.


அப்போது திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சோதனைச்சாவடியில் இருந்த இருந்த போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து தணிக்கை செய்து கொண்டிருந்தனர். வைகோ சென்ற வாகனத்தையும் நிறுத்தி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
உடனே காரை விட்டு இறங்கிய வைகோ தனது காரின் பின்பகுதியில் இருந்த ‘டிக்கி’யை திறந்து விடச் செய்து ‘என்னுடைய பெட்டி, உடைமைகள் அனைத்தையும் சோதனை செய்து கொள்ளுங்கள். அதுபோல முதல் அமைச்சர் ஜெயலலிதா பயணம் செய்கின்ற ஹெலிகாப்டர், கார் மற்றும் அவரது கூட்டங்களுக்கு அணிவகுத்துச் செல்கின்ற வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்’ என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதன்பின் அவர் அங்கிருந்து ராஜபாளையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.