பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

ஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம் 
ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்
ஒன்று நடாத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தினால் ஐநாவில் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர்களை ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தடுத்துள்ளனர். இதனைக் கண்ட சுவிஸ் பொலிஸார் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.

ஐ.நா.வில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை  மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோரை பயங்கரவாதிகள் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
அவ்வேளையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் சென்றவேளையில் சிங்கள ஊடகவியலாளர்களை மட்டும் புகைப்படம் எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதித்து ஏனைய சர்வதேச சுயாதீன ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்காமல் தடையை ஏற்படுத்தினர்.