பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

நடிகை குயிலி மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும்
பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் அவர் கூடுதலாக ஆறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து  வட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார், பிரசாரத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பத்திருந்த அதிமுக வழக்கறிஞர் அன்பரசன், நடிகை குயிலி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.