பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்;
போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகன் தலைமையில் சரவணம்பட்டி போலீஸார் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது சின்னவேடம்பட்டி, சுண்ணாம்பு காளவாய் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் கார் மற்றும் பைக்குகளில் சென்ற கும்பலை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் காந்தி மாநகரை சேர்ந்த சஞ்சய்ராஜ் (வயது-23), ஒண்டிப்புதூரை சேர்ந்த பால் பீட்டர் (வயது-25), பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோபிகண்ணன் (வயது-20), இரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக் (வயது-23), காந்திபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது-22), கணபதி மாநகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது-20), செந்தில்குமார் (வயது-21) என்பது தெரியவந்தது.


முன்னுக்குபின் முரனாக பேசிய இவர்களை காவல்நிளையத்துக்கு கூட்டிச்சென்ற போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், ள சஞ்சய்ராஜ், பால் பீட்டர் ஆகிய இருவருக்கும் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்ற இரு கொலை சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், விஜயகுமார், செந்தில்குமார் தவிர மற்றவர்களுக்கு சங்கிலி பறிப்பு, வழிப்பறி,
 
திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, வெளியில் வந்தபின் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் சேர்ந்து ஈடுபட்டதும், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுகளில் கொள்ளையடிக்கும் திட்டத்தில் சுற்றியதும் உறுதி செய்யப்பட்டது.


அதைத் தொடர்ந்து அவர்களை மாநகர போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு பைக்குகள், கத்தி, அரிவாள்கள், உருட்டுக்கட்டை, மிளகாய்ப் பொடி, முகமூடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் சதாம் உசேன், கோவையில் ஒரு காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிபவரின் மகன் என்றும் போலீசார் தெரிவித்தனர்.