பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2014

புகையிரதத்துடன் மோதுண்ட நபர் சிகிச்சை பலன் இன்றி மரணம் 
நேற்று புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக  A9 வீதிக்கு செல்ல முட்பட்ட நபரரையே எதிரே வந்த புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.

சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த சிவராஜா ஜெகன் (வயது 32) -என்பவரே இவ்வாறு மோதுண்டதாகவும் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதன வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.
 
இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த நபர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்ததாக எமது வைத்தியசாலை செய்தியாளர் தெரிவித்தார்.