பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2014

மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்தார் .வைகோ பதில்-காட்சி மாறுகிறத ?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 23.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரி மு.க.அழகிரியை சந்தித்தேன் என்றார்.
அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரியின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என வைகோ பதில் அளித்தார்.
 
மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.