பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

விருதுநகரில் என்னை தோற்கடிக்க சதி -வை கோ 
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட வைகோ பேசியதாவது
:–
மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி. மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் தருகிறேன். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 10 தொகுதிகள் கேட்டோம். ஆனால் தற்போது 7 தொகுதிகள் தருவதாக உறுதி அளித்துள்ளனர். தென்காசி தொகுதியை பெறுவதில் மட்டும் சிக்கல் உள்ளது. விருதுநகர் தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்கிறார். மு.க.ஸ்டாலினும் என்னை தோற்கடிக்க திட்டம் வகுத்துள்ளதாக செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார். இந்த சதிகளை தகர்ப்போம் என்று பேசினார்