பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2014

                                                கண்ணீர் அஞ்சலி 



    
           திருமதி.குலதேவி தர்மகுலசிங்கம் 
              தோற்றம்  16.06.1961-மறைவு  14.03.2014
                                                      

பிறந்த இடம் .தாவடி,கொக்குவில்
புகுந்த இடம் .புங்குடுதீவு .8
வாழ்ந்த இடம் .லவுசான் ,சுவிட்சர்லாந்து 

இலங்கை தாவடி கொக்குவிலை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை புகுந்த இடமாகவும் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கிறோம் . சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் லவுசான் பிராந்திய பிரதிநிதியாக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவரும் எமது புங்குடுதீவு மண்ணின் உயர்ந்த சமூக சேவை வழிகாட்டியுமான திரு.க.ஐயாத்துரை ஆசிரியரின் புத்திரனுமாகிய தர்மகுலசிங்கததின் துணைவியாராக வாழ்ந்து அவரது தாயக ,சமூக  நலன் பணிகளில் உறுதுணையாக வாழ்ந்து வந்தவர்.லவுசான் பகுதி தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் சமூகத்தோடு பல்வேறு வழிகளிலும் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டவர் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில்  எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் 

                        புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                     சுவிட்சர்லாந்து 
                                                            19.03.2014