பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

இலங்கை-இங்கிலாந்து அணிகளின் விறுவிறுப்பான ஆட்டம்:உறைந்து போன ரசிகர்கள்
இலங்கை-இங்கிலாந்து அணிகளின் இன்றைய ஆட்டத்தில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தது.

நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி (4) விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் (189) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரையில் ஆரம்ப வீரர்களின் அதிரடியான ஆட்டம் அணியின் உயர்வான ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
ஜெவர்த்தின  (51) பந்துகளுக்கு முகம் கொடுத்து (3) சிக்ஸர்கள் அடங்கலாக (89) ஓட்டங்களையும் 
                                                     
டில்ஷான் (47)பந்துகளில் (2) சிக்ர்கள் அடங்களாக (55)ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
                                                       
பதிலுக்கு (190)ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் பொறுமையான துடுப்பாட்டம் வெற்றிக்கு வழியமைத்தது.
இங்கிலாந்து அணி (19.2) ஓவர்கள் நிறைவில் தனது(4) விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில்  வெற்றி இலக்கை எட்டியது.
ஆரம்பத்தில் (2) விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்த இங்கிலாந்து பின்னர் ஹலிஸ்ன் அதிரடியான ஆட்டத்தில் வெற்றி இலக்கை எட்டியது.
ஹலிஸ் இன்றைய தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டமிழக்காமல் (64) பந்துகளுக்கு முகம் கொடுத்து (6) சிக்ஸர்கள் அடங்கலாக (116) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
                                                      
அணியின் அடுத்த படியான ஓட்ட எண்ணிக்கையினை மொர்ஹன் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவர் (38) பந்துகளுக்கு முகம் கொடுத்து(2) சிக்ஸர்கள் அடங்களாக (57) ஓட்டங்களை எடுத்தார்.
                                                     
இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக அமைந்த நிலையில் முடிவடைந்தது.
இங்கிலாந்து அணி தனது இறுதி ஓவரில் (7) ஓட்டங்களை பெறவேண்டிய ஓரு கட்டம் ஏற்பட்டது.
இறுதி ஓவரின் (1)வது பந்தில் (1)ஓட்டமும் இரண்டாவது பந்தில் ஹலிஸ்ன் அதிரடியான துடுப்பாட்டத்தில் (6) ஓட்டம் பெற்ற நிலையில் வெற்றியை பதிவாக்கியது இங்கிலாந்து அணி.