பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவற்றது: ஜெயலலிதா
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்றது. அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை தொடர்பான பிரச்சினை 5 ஆண்டுகளாக தொடர்கிறது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் தமிழர் இலங்கையில் வசிக்கும் சூழல் உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், மீனவர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.