பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014

ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறினார்.
மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செய.லாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு சின்னாபின்னமாக்கியது காங்கிரஸ் தலைமையிலான அரசு. இந்த ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகி விட்டது. மத்தியில் பதவியில் உள்ள ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனிமேல் காங்கிரஸ் ஆட்சி அமையவே விடக்கூடாது. இந்த ஊழல் ஆட்சியில்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை குடும்ப ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. அங்கம் வகித்தது. எனவே, ஊழல் ஆட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 33 மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்து அ.தி.மு.க. அரசு. விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.

அதேபோல், தமிழர்களின் நலனை பாதுகாக்கும் அரசு மத்தியிலும் அமைய வேண்டும். மத்தியில் மக்கள் ஆட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அது அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும். எனவே, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்