பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014

புஸ்ஸல்லவத்தை குளத்தில் நீராடிய மூவர் உயிரிழப்பு

தெஹியத்த கண்டிய பொலிஸ் பிரிவில் புஸ்ஸல்லவத்தை குளத்தில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர். தெஹியத்த கண்டிய புஸ்ஸல்லவத்தை
பகுதியில் அமைந்துள்ள குளத்தில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் இவர்கள் நீராடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் தங்கராசா (40 வயது), மாவைக்கும்புற பம்பரகஹாஎல பகுதியைச் சேர்ந்த திலகசிறி பண்டார (வயது 45), நூறேக்கர் பம்பரகஹாஎல பகுதியைச் சேர்ந்த பல்லேகெதர சுனில் (வயது 41) என்ற மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் தெஹியத்தை கண்டிய பகுதிக்கு நெல் சேகரிப்பதற்காக சென்றவர்கள் என்றும், கூலித் தொழிலாளர்களான இவர்கள் வேலையை முடித்துக்கொண்டு நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெஹியத்த கண்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பண்டாரகம ரைகம் உயன்வத்த குளத்தில் நீராடச் சென்ற மற்றுமொரு நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். உலங்கொட வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அஞ்சனகுமார என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
11 நண்பர்களுடன் குறித்த குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்