பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014

வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்!
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தீவிர தேர்தல் பிரச்சாரம்
செய்து வருகிறார்.


தனது 2–ம் கட்ட பிரச்சாரத்தை நெல்லையில் விஜயகாந்த் தொடங்குகிறார். அதன்படி வருகிற 2–ந் தேதி தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சதன்திருமலை குமாரை ஆதரித்து சங்கரன் கோவிலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
அதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 இடங்களில் ஒரே வேனில் இருந்தபடி வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பேசுகிறார்.