பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014


ஸ்டாலினுடன் மோதலா? : குஷ்பு பதில்
நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலினுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 
‘’அடிப்படையற்ற இத்தகைய வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. யூகத்தின் பேரில் கேட்கப்படும் இத்தகையை கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.


கட்சியில் எனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தால் நான் தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பேன். ஆனால் இன்னமும் நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி வருகிறேன்’’ என்று கூறினார்.