பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அவர்களது பேச்சுரிமைக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர், இரண்டு மனித உரிமை செய்ற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமைக்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரினதும் குடும்பங்களும் வழக்கறிஞர்களும் அவர்களை அணுக அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான கைதுகள் இலங்கை மீது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 
அத்துடன், இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியள்ளார்.