பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2014

விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரி கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இவ்விருவரும் எந்தவொரு ஊடகங்களுக்கும் கட்டாயம் கருத்து எதனையும் தெரிவிக்க கூடாது என்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெற்று கொண்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்