பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014


இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கையின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க உறுதி பூண்டுள்ளோம். இலங்கை சாசனத்திற்கு உட்பட்டே தமிழர் பிரச்னைக்கான எந்தவொரு தீர்வும் இருக்க வேண்டும்.
இலங்கை அரசில் முடிவு எடுப்பதிலும் தங்கள் தலைவிதியை தீர்மானி்ப்பதிலும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்படும் என்றார்.