பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2014

பளையை வந்தடைந்தது யாழ்தேவி
கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி சொகுசு ரயில் இன்று காலை பளை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.


வடக்கில் இடம்பெற்ற போரின் போது சேதமடைந்த ரயில் பாதை, புதிதாக அமைக்கப்பட்டு இன்று கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இடம்பெற்றுள்ளது.

அதன்படி தினமும் காலை 5.45 இற்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் பிற்பகல் 1.21 இற்கு பளையை வந்தடையும்.

பளையில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் காலை 10.40இற்கு புறப்பட்டு மாலை 6.25 இற்கு கொழும்பை வந்தடையும் என ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பி ஆரியரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்
ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.