பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2014


அ.தி.மு.க. இணையதளத்தில் பெயர் பதிவு செய்த 35 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர்.
அ.தி.மு.க. இணையதளம்

சமூக வலைதளங்கள்(பேஸ்–புக், டுவிட்டர்) மற்றும் இணையதளங்கள் மூலம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், இணையதளத்தை பயன்படுத்தும் படித்த இளைஞர்களை கவரவும், அவர்களிடமிருந்து வாக்குகளை பெறவும் அ.தி.மு.க. இணையதள அணியினர் புதிய வகை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர விரும்புவோர், www.aiadmk.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், 10–வது நிமிடத்தில் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை கிடைக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஒரு மாத காலத்தில் அ.தி.மு.க. இணையதளத்தை பார்வையிட்டு, பெயர் பதிவு செய்த 35 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கட்சியில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.
‘‘வாட்ஸ்–அப்’’ சேவை
அ.தி.மு.க. இணையதளத்தை நோக்கி வரும் படித்த இளைஞர் பட்டாளத்தை ஈர்க்க தேர்தல் தொடர்பான செய்திகள் அவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது பிரபலமாகி வரும் ‘‘வாட்ஸ்–அப்’’ சேவை மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளும் பிரசாரங்களும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா பிரசாரத்தினை நேரடியாக அளிக்கும் இது போன்ற சேவை, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இளைஞர்களிடையே சென்றடையும்போது, அவர்களுக்கு அ.தி.மு.க.வின் மீது ஒரு பிணைப்பை உண்டாக்குவதே இதன் நோக்கம் என்று அ.தி.மு.க. இணையதள அணியினர் தெரிவித்தனர்.