பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!– விமல் வீரவன்ச

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த பணம் பிரசார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சில பிரசார நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான விளம்பரங்களை பிரசாரம் செய்யும் நோக்கிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தூதரகத்தின் பிரதான இலக்காக அமைந்துள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கிரான்ட்பாஸில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.