பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

ஆபாசபட விற்பனை ; இருவர் கைது
ஆபாசபடங்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஆபாசப்பட சீ.டிக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.நகரில் இரண்டு சீ.டி கடைகள் இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலர் வீதியில் உள்ள 'பொருளியல் கல்லூரி'க்கு அண்மையிலும் கன்னாதிட்டி 'சயன்ஸ் கோல்' ஆகிய தனியார் கல்வி நிலையங்களுக்கு அண்மையிலும் உள்ள கடைகளிலேயே குறித்த படங்கள் விற்பனை செய்யப்பட்டன.

எனினும் தகவலை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய  குறித்த கடைகளுக்குச் சென்ற பொலிஸார் தேடுதல் நடாத்தியதில் 25 மேற்பட்ட சீ.டிக்கள் ஒவ்வொரு கடைகளில் இருந்தும் மீட்கப்பட்டன.

அதன்படி குறித்த கடை உரிமையாளர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டி.ஐ.ஜி மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சீ.டிக்கள் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன் நீண்டகாலமாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற கடைகள் பல இனங்காணப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அதிரடி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.