பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014


வேட்பு மனு தாக்கல் செய்தார் உதயகுமார்: ஆதரவு பெருக்கவே புகுந்த வீட்டுக்கு செல்கிறேன் என பேச்சு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் மனு தாக்கல் செய்வதற்காக
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்றார். பின்னர் 2.30 மணிக்கு குமரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் மனுதாக்கல் செய்தார். அவருடன் தமிழ்நாடு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்டினா சாமி, குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பங்கு தந்தை கிளாரட் கண்ணன், ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் கண்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக இடிந்தரையில் இருந்து புறப்பட்ட உதயகுமாருக்கு, இடிந்தகரை மக்கள் அனைவரும் அஞ்சுகிராமம் வரை உடன் வந்து கண்ணீர் மல்க விடை அளித்தனர். அவர்களிடம் பேசிய உதயகுமார், என்னுடைய தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்காக செல்கிறேன். என்னுடைய தாய் வீடு என்றுமே இடிந்தகரைதான். இந்த புகுந்த வீடை நான் பயன்படுத்துவதற்கு காரணம். புகுந்த வீடு என்பது தேர்தல். நம்முடைய அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்திற்கு ஆதரவு பெருக்கவும், பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவும்தான் இந்த புகுந்த வீடான அரசியலை பயன்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.